“அன்பிருந்தால் துன்பமில்லை”
- உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ என்பார் ஓஷோ. அது நிஜம்தான். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகிறது. பலர் ஆதரவற்றோராக தவிக்கவிடப்படுகிறார்கள். பலர் கொலை செய்யப்படுகிறார்கள். அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும்.
- யாரிடமோ நீங்கள் சதா இணைந்திருப்பதுதான் அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். துன்பமான நேரத்தில் மட்டும் ஒருவருடன் இணைந்தால் அவருக்கு நீங்கள் உதவுவதாகக் கொள்ளலாம். உதவுவதால் துன்பத்தைப் போக்கலாம். நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். மற்றவருக்காக இரக்கப்படுவது மட்டும் அன்பாகி விடாது. தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
- தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க 7 பண்புகள் தேவை என்கிறார் ஜான்கிரே. அன்புகாட்டுதல், அக்கறை கொள்ளல், புரிந்து கொள்ளல், மதித்தல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளல், நம்பிக்கை வைத்தல் போன்றவை அந்த பண்புகளாகும். ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
- அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. அன்பிலும் பல வகை இருக்கிறது. நட்பு, காதல் சார்ந்த அன்பு இருக்கிறது. என்னுடையது விட்டுத்தரமாட்டேன் என்பது வெறித்தனமான அன்பு. ஒரே பின்னணி பார்த்து வருவது செயல்பூர்வமான அன்பு. தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும்.
- அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள். மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும்.
- புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.
- பாராட்டுவதால் மனித மனம் மகிழ்வுறுகிறது. ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது. புகழ்வதெல்லாம் பாராட்டாகிவிட முடியாது. இயல்பை விளக்கி, முழுமையை அங்கீகரிப்பதே பாராட்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
- ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். ஏற்றுக் கொள்ளல் என்பது தவறுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அனுமதித்தலை குறிப்பதல்ல. குறைகளை மன்னிப்பதாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும். நேர்மை, ஒழுக்கம், உண்மையாயிருத்தல் போன்றவை மற்றவர்க்கு நம்மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பண்புகளாகும்.
- கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
- நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள், தகுதி வேறுபாடுகள் பார்ப்பது, குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். புரிந்து கொள்ளல், பணிவு, பொறுப்பு, உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.
மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – தாழ்வுமனப்பாண்மை, குடும்ப பிரச்சனை, கணவன் மனைவி சண்டை, – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.