தலைமுடி கொட்டுதல் / உதிர்தல்
தலைமுடி கொட்டுதல் – Hair Falling
தலைமுடி கொட்டுதல் என்பது தலையில் உள்ள முடி பரவலாக உதிர்ந்து முடியின் அடர்த்தி குறைவது முதல் வழுக்கை ஏற்படுதல் வரையாகும். பலவேறுபட்ட காரணங்களுக்காக முடி உதிரலாம்.
மருத்துவ ரீதியாக தலைமுடி உதிர்வதை பலவகைப்படுத்தலாம். அவையாவன.
பொதுவான முடி உதிர்தல் – Common Hair Fall
- பொதுவாக முடி உதிர்தல் என்பது உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்திற்கு பின் ஏற்படுகிறது. அதாவது நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடத்தல், பெரிய அறுவை சிகிச்சை அல்லது மோசமான நோய்தொற்றுக்கு பின்னர் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மாறும்போதும் முடி உதிர்தல் ஏற்படலாம். முக்கியமாக, பெண்களில், குழந்தை பிறந்த பின்னர் இது போன்று ஏற்படலாம். மிதமான அளவு முடி உதிர்தல் இருக்கும். ஆனால் வழுக்கை தோன்றுவது அரிதாக காணப்படும்.
மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்– முடி உதிர்தல் – Hair Fall Due to Side effect of Medicines.
- சில மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படக்கூடும். இதனால், தலை முழுவதிலும், திடீரென முடி உதிரக்கூடும்.
மருத்துவ ரீதியாக நோயின் அடையாளம் – முடி உதிர்தல் – Hair Fall Due to Diseases.
- இந்த வகை முடி உதிர்தல் மருத்துவ ரீதியாக நோயின் அடையாளமாகும். அதாவது தைராய்டு பிரச்சினைகள் (ஹைப்பர் தைராய்டிஸம் Hypothyroidism மற்றும் ஹைப்போ தைராய்டிஸம் Hyperthyroidism), பாலி ஹார்மோன்களின் Sex Hormone Disorders அளவு அதிகமாகவோ அல்லது குறைவுபடும்போதோ, அல்லது மிக மோசமான சத்துணவு பற்றாக்குறை Nutritional Disorders முக்கியமாக புரதம், இரும்பு, துத்தநாகம் அல்லது பையோடின் போன்றவற்றின் குறைபாடுகளின் அடையாளமாகும். இது போன்ற குறைபாடுகள், உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்களில் பொதுவாக காணப்படுகிறது.
தலையின் தோல்பகுதியில் பூஞ்சான்களினால் ஏற்படும் தொற்று நோய் – Tinea Capitis
சில வகை பூஞ்சான்களினால் ஏற்படும் நோய் தொற்றுவினால், தலையில் வட்ட வட்டமான வடிவில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இவ்வகையான முடி உதிர்தல் பொதுவாக சிறுபிள்ளைகளுக்கு வரும்.
பரம்பரையாக ஏற்படும் வழுக்கைத்தன்மை – Heredity Baldness.
ஆண்களுக்கு முடி உதிர்தல் என்பது, தலையில் முற்பகுதியில் முடிஉதிர்தல் மற்றும்/அல்லது தலையின் மேற்பகுதியில் உள்ள முடி தடிமனின்றி மெல்லியதாக காணப்படுதல் ஆகும். இம்முடியிழப்பு ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான வகையாகும். இவ்வகையான வழுக்கை ஒரு ஆணின் எந்த வயதிலும் ஏற்படலாம். வழுக்கை (மண்டை) மூன்று காரணிகளின் கூட்டுச் செயலினால் ஏற்படுகிறது. அதாவது பரம்பரையாக ஏற்படக்கூடிய தன்மை Heredity, ஆண்களில் சுரக்கும் ஆண் இன ஹார்மோன் Male Sex Hormone problem மற்றும் வயது அதிகரித்தல் Aging போன்றவைகளாகும். பெண்களுக்கு தலையின் முன்பாகம் தவிர, அனைத்து இடங்களிலும் தலைமுடி அடர்த்தியின்றி மெலிந்து காணப்படும். சிலருக்கு முன்பகுதியில் நிறைய முடி உதிர்ந்து சொட்டை போல இருக்கும்.
அறிகுறிகள் – Signs
நாம் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 தலைமுடியினை இழக்கிறோம். ஒருவேளை இதற்கு மேற்பட்ட தலைமுடி உதிர்ந்தால் இது ஒரு வழுக்கை ஏற்படக்கூடியதற்கான காரணமாகும். பொதுவாக தலைமுடி மெலிந்து மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் வழுக்கை ஏற்படுவதையும் கவனிக்கலாம்.
தடுத்துக்காத்தல் – Prevention
- உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல்,
- நல்ல சுகாதாரமான உணவகளை உட்கொள்ளுதல்
- நல்ல தலைமுடியினை பராமரிக்கும் முறைகள்,
- முடி உதிர்வதை தடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் பூஞ்சான்களின் தொற்றுவினால் ஏற்படும் முடி இழப்பினை, முடியினை சுத்தமாக வைத்துக் கொள்வதினாலும், தொப்பி, சீப்பு அல்லது ப்ரஷ் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதினை தவிர்ப்பதன் மூலமும் தடுத்துக் காக்கலாம்.
- பரம்பரையாக ஏற்படக்கூடிய முடி இழப்பினை சிலவேலைகளில் மருந்துகளை உட்கொள்வதினாலும் தடுத்துக் காக்கலாம்.
தலைமுடி உதிர்தல் தடுக்க சில ஆலோசனைகள்
- கூந்தலின் வறட்சித் தன்மையை நீக்க சில குறிப்புகள்:-
- விளக்கெண்ணெய் தேய்க்கவும்.
- முட்டை கலந்த ஷாம்பை உபயோகப்படுத்தவும்.
- தயிரை தடவி ஊரவைத்து குளிக்கும் போது தலையை நன்கு அலசவும்.
முடி வளர, முடி கருமையாக மற்றும் முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்:-
- முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்.
- கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
- நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
- சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
- செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
- முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
- வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.
இவை அனைத்தும் செய்தும் முடி உதிர்தல் நிற்க்கவில்லை என்றால் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.
முடிஉதிர்தலுக்கான ஓமியோபதி சிகிச்சை – Hair Falling Homeo Treatment
அறிகுறிகளுக்கேற்ற ஓமியோபதி மருத்துவ சிகிச்சை முடி உதிர்தலுக்கு நல்ல பலன் தரும்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:– 9443054168
Pondicherry:– 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Hair Falling, Mudi uthirthal, mudi kotuthal, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.