கை கழுவ கற்றுக்கொள்ளுங்கள்
v உலகம் முழுவதும் டயேரியா நோய்க்கு ஆண்டு தோறும் சுமார் இருபத்து ஐந்து இலட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனத்தின் புள்ளி விவரம் ஒன்று.
v பெரும்பாலும் வளரும் நாடுகளிலும், பிந்தங்கிய நாடுகளிலும் உள்ள மக்களே இந்த நோய்க்கு இலக்காகின்றனர்.
v இந்த டயேரியா நோயின் தாக்கத்தை முப்பது விழுக்காடு வரை குறைப்பதற்குரிய வழி “கையை சுத்தமாகக் கழுவுவது” தான் என்னும் வியப்பூட்டும் ஆராய்ச்சி முடிவை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
v பதினான்கு விதமான விரிவான ஆராய்ச்சியின் முடிவாக இந்த அறிக்கையை அவர்கள்சமர்ப்பித்திருக்கின்றனர். குறிப்பாக மருத்துவமனை, கழிவறை, பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் சென்று வரும்போதெல்லாம் சுத்தமாகக் கைகளைக் கழுவினாலே இந்த நோயை பெருமளவுக்கு தடுத்து விட முடியும் என்கின்றனர் அவர்கள்.
v நகைப்புக்குரிய அல்லது தேவையற்ற ஆராய்ச்சி போல இது தோற்றமளித்தாலும் இது தரும் பயன் பெரும் வியப்பை அளிக்கிறது. சுமார் எட்டு இலட்சம் பேரை சாவிலிருந்து தடுக்க இந்த சிறு செயல் உதவுகிறது என்பது வியப்பை தருவதில் வியப்பில்லை தான்.
v பல வேளைகளில் நாம் அலட்சியமாக இருந்து விடுகின்ற சிறு நிகழ்வினால் பெரிய நோய்க்கு இலக்காக நேரிடுகிறது என்பதை இந்த ஆராய்ச்சி நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
v சுகாதாரமாக இருக்க வேண்டியதன் தேவையையும், குறிப்பாக கை கழுவ வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆராய்ச்சி நமக்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றது.
v அடிக்கடி கை கழுவ வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கிறது, அவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் அந்த ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர்.
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.