ஆண்கள் வயசுக்கு வருவது எப்போது?
- பெண்கள் மட்டும்தான் பூப்பெய்துவார்களா… ஆண்களும் கூட பருவம் எய்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த வயதில் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. சமிபத்தில் அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் ஆண்கள் 6 வயதிலேயே கூட பூப்பெய்தி விடுவதாக தெரிவித்துள்ளனர்.
- முன்பெல்லாம் ஆண்கள் 12 வயதில் பூப்பெய்தினார்களாம். ஆனால் இப்போது அது குறைந்து 6 வயதிலேயே கூட பூப்பெய்தும் ஆண்கள் அதிகரித்துள்ளனராம்.
- 6 வயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு முதிர்ச்சித்தன்மை தெரியத் தொடங்கி விடுகிறதாம். அதுதான் அவர்கள் பூப்பெய்தும் நிலையை எட்டி விட்டதற்கான அறிகுறியாம்.
- இதுதொடர்பாக அமெரிக்காவில் 4000 சிறார்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் வெள்ளை இனத்தவரிடையே பூப்பெய்தும் வயது சராசரியாக 10 ஆக உள்ளதாம். அதேசமயம், கருப்பர் இனத்தவர்களிடையே 9 வயதாக பூப்பெய்தும் வயது இருக்கிறதாம்.
- இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் கூட கிட்டத்தட்ட இதே வயதில்தான் ஆண்கள் பூப்பெய்துகிறார்களாம்.
- வெள்ளை இன சிறார்களிடையே 6 வயதிலேயே கூட சிலருக்கு பூப்பெய்தும் அறிகுறிகள் தெரிகிறதாம். இந்த எண்ணிக்கை 9 சதவீதமாக உள்ளது. அதேசமயம், கருப்பர் இனத்தவரிடையே 6 வயதில் பூப்பெய்துவது என்பது 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
- 9 சதவீத வெள்ளை இன ஆண்களைப் பொறுத்தவரை சராசரியாக 6 வயதிலேயே அவர்களுக்கு விதைப் பை வளர்ச்சி நன்கு வந்து விடுகிறதாம். கருப்பர் இனத்தவர்களில் இது 20 சதவீதமாக உள்ளது.
- அந்தரங்க உறுப்பு உள்ள பகுதியில் முடி வளருவது, விதைப் பை விரிவடைந்த அடுத்த ஆண்டிலேயே ஏற்படுகிறதாம். இது பொதுவாக அனைத்து வயதினரிடையேயும் ஒரே மாதிரியாக உள்ளதாம்.
- பெண்களைப் பொறுத்தவரை மார்பக வளர்ச்சிதான் அவர்கள் பூப்பெய்தப் போவதற்கான முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. 10 சதவீத வெள்ளை இனப் பெண்களில் 7 வயதில் இது நடைபெறுகிறதாம்.
- கருப்பர் இனப் பெண்களில் இது 23 சதவீதமாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை பூப்பெய்தும் வயது சராசரியாக 12 ஆக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, 90******99 விரைப்பு தண்மை குறைபாடு – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.