SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Migraine Headache Homeo Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒற்றை தலைவலி ஓமியோபதி சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு.
June 20th, 2015 by Dr.Senthil Kumar

 

ஒற்றை தலைவலி, மைக்ரேன் தலைவலி, One side head ache, head ache vomiting, Migraine headache Homeopathy Treatment (5)

தலைவலி – Head Ache,

 

தலைவலிகள்

  • நாம் ஒவ்வொருவரும் எப்போதாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. சில தலைவலிகள் மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பான்மையானவை தற்காலிகமாக சரியாகக்கூடியவை.

 

  • பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவை.

 

  • ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்காதீர்கள்.

 

  • தலைவலியானது அதிக பாதிப்பிற்குறியதா, அடிக்கடி வரக்கூடியதா அல்லது காய்ச்சலுடன் வரக்கூடியதா என மருத்துவர் சோதிப்பார்.

 

தலைவலி எப்பொழுது ஆபத்துக்குரியது?

  • அனைத்து தலைவலிகளுக்கும் மருத்துவ உதவி தேவை இல்லை. சில தலைவலிகள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும், ஒவ்வாமையாலும், தசைப்பிடிப்பாலும் ஏற்படும். அவைகளை வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம்.
  • இதர தலைவலிகள் தீவிரமானவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

 

கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், தலைவலிக்குரிய மருத்துவ சிகிச்சை அவசியம் தேவை.

  • அதிக வலியுடன் திடீரென்று எதிர்பாராது வரக்கூடிய தலைவலி – Sudden severe headache.
  • பார்வையில் மாற்றம் அல்லது வேறு உடல் கோளாறுகளுடன் தொடர்புடைய தலைவலிகள். Headache with visual disturbances, and physical problems,
  • டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலி, Tension head ache.

 

ஒற்றைத்தலைவலி Migraine – மைக்ரேன் & தொகுப்புத் தலைவலி ஆகியவை இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட தலைவலிகளின் வகைகளாகும். அளவுக்கு மீறிய அதிக உடல் உழைப்பும் இத்தலைவலியை அதிகப்படுத்துகின்றது. தலைப்பகுதியைச் சுற்றிலும் உள்ள திசுக்களில் ஓடக்கூடிய இரத்தக்குழாய்கள் விரிவடைவதாலோ அல்லது வீங்குவதாலோ, தலையைக் குத்துவது போன்றோ அல்லது அடிப்பது போன்றோ வலிக்கச்செய்யும். தொகுப்புத் தலைவலியை விட ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்) அதிக அளவில் காணப்படுகிறது.

 

தொகுப்புத் தலைவலி வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் அடிக்கடி தொடர்ந்து வரும். இந்த தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும். இது தீவிரமான வலியைத் தரும்.

 

டென்ஷன்  காரணமாக ஏற்படும் தலைவலி: – Tension Headache

  • பரபரப்பு அல்லது தசைச் சுருக்கத் தலைவலிகள் பொதுவாக வரக்ககூடியவை. Head ache due to tension and muscle stiffness.
  • ஒருவரிடம் அதிக மன அழுத்தம் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வலியைக் கொடுக்கும். Depression and stress related head ache,
  • டென்ஷன் தலைவலிகளுடன் தொடர்புடைய வலியானது மந்தமாக( குறைந்த அளவில்) இருந்தாலும் நீடித்து இருக்கக்கூடியது. நெற்றி, தலைப்பொட்டு & கழுத்தின் பின்பகுதியில் வலியை உணரலாம். Dull constant pain in nape of neck and temporal region.
  • டென்ஷன் தலைவலி வந்தால் தலைப்பகுதியைச்சுற்றிலும் கயிறைக் கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டதுபோல் இருக்கும் என்பார்கள். Tight sensation around head,
  • டென்ஷன் தலைவலி அதிக காலங்களுக்கு தொல்லைகொடுத்தாலும், மன அழுத்தம் இருக்கும் காலகட்டங்கள் வரை மட்டுமே தொல்லை தரும். அதன் பிறகு நின்று விடும். Tension head ache relives after over come from depression and stress.
  • டென்ஷன் தலைவலி பொதுவாக பிற அறிகுறிகளுடன் தொடர்புடையது அல்ல. ஒற்றைத்தலைவலிக்கு(மைக்ரேன்) வருவது போன்று முன் கூட்டிய அறிகுறிகள் ஏதும் இதற்கு கிடையாது. ஏற்படுகின்ற தலைவலிகளில் 90%தலைவலிகள் டென்ஷன் தலைவலிகளே.

 

 

சைனஸ் தலைவலிகள் – Sinus Head ache

சைனஸ் நோய் அல்லது டஸ்ட் அலர்ஜியின் காரணமாக இத்தலைவலி வரும். சளி அல்லது ஃப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து சைனஸ் பாதைகள், மூக்கின் மேற்புறம் மற்றும் பின்புறம் உள்ள எலும்புகளில் உள்ள காற்றறைகள் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கத்தால் சைனஸ் தலைவலிகள் ஏற்படும்.

 

சைனஸ் பகுதிகளில் அடைப்பு அல்லது கிருமிகளின் பாதிப்பு அதிகமாகும் போது தலையில் வலி உண்டாக ஆரம்பிக்கும். இவ்வலியானது தீவிரமாகவும், தொடர்ந்தும் இருக்கும். காலை முதல் வலிக்க ஆரம்பிக்கும். தலைகுனிந்தால் துடிக்கச் செய்யும் அளவுக்கு வலிக்கும்.

 

சைனஸ் தலைவலியின் பொதுவான அறிகுறிகள்: – Symptoms of Sinus Head Ache

  • கண்களைச் சுற்றிய பகுதிகள், கன்னங்கள் மற்றும் நெற்றிப்பகுதிகளில் ஏற்படும் வலி & அழுத்தம். Pain and pressure in check, forehead.
  • மேல் வரிசைப்பற்களில் வலி இருப்பது போன்ற உணர்வு.- Pain in upper teeths.
  • காய்ச்சல் மற்றும் குளிர் – Fever with Chill
  • முக வீக்கம் – Swelling in face.

 

சைனஸ் தலைவலியால் உருவாகும் முக வீக்கத்தைக் குறைக்க சூட்டு ஒத்தடம் மற்றும் ஐஸ்கட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

 

ஒற்றைத் தலைவலிகள் (மைக்ரேன்) – Migraine Head ache.

ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான அறிகுறிகள்: Migraine Headache Symptoms

  • பார்வையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படும் வலி. Head ache followed by visual disturbances.
  • தலைப்பகுதியின் ஒரு புறத்தில் மிதமான வலியிலிருந்து தீவிரமான துடிக்க வைக்கும் வலி – One side mild to severe pain,
  • வாந்தி அல்லது குமட்டல் வாந்தி எடுத்தால் ஒருசிலருக்கு தலைவலி குறையும். – Nausea or Vomiting Relives head ache
  • வெளிச்சம் & இரைச்சலுக்கு எளிதில் உணர்ச்சிக்கு உள்ளாகுதல். – Emossion,Sound and Light makes migraine head ache.

 

பல்வேறு காரணிகள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டக்கூடியவை. மது, சாக்லேட், நாள்பட்டபால்கட்டி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் காபி போன்ற உணவுப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆல்கஹால் மற்றும் காபி பொருட்களைப் பயன்படுத்துதல் தலைவலியைத் தூண்டும்.

 

குறிப்பு:- Note

மிக அதிகமான தலைவலிகள் உங்களுக்கு இருக்குமானால், மருத்துவரை அணுகி அவற்றின் அறிகுறிகள்,பாதிப்புத்தமை மற்றும் வலியைக் குறைக்க நீங்கள் கையாண்ட நடவடிக்கைகள் முதலியவற்றைத் தெளிவாக விளக்கவும்.

 

 

ஒற்றை தலைவலி ஓமியோபதி சிகிச்சை

ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. முறையாக சிகிச்சை மேற்கொண்டால் தலைவலியிலிருந்து விடுதலை பெறுவது உறுதி.

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment please Call us or Mail Us

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – ஒற்றை தலைவலி, மைக்ரேன், Migraine, Headache,  – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

 

==–==

 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India