கேள்வி: எனக்கு நாட்பட்ட மூலம் இருக்கிறது இப்போது ஆசன வாயின் அருகில் கட்டி ஏற்பட்டு பெளத்திரம் என்ற நோயும் வந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார். இதில் இருந்து விடுபட எதேனும் வழி இருக்கிறதா?
மருத்துவர் பதில்: மூல நோய்க்கு எவையெல்லாம் காரணமாகிறதோ அவையனைத்தும் பெளத்திரம் நோய்க்கும் காரணமாகின்றன.மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணையும் இடத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘மெல்லிய குழாய்’ போன்று உருவாகிவிடும்.
மலம் கழிக்கும்போது மலம் அந்த மெல்லிய குழாய்க்குள்ளும் இறங்கிவிடும். பின் அங்கு நோய்த்தொற்று உருவாகி சீழ்கட்டி உருவாகி வெடிக்கும். அந்த நிலையைத்தான் பெளத்திரம் என்கிறோம். இந்த நிலை மீண்டும் மீண்டும் ஏற்படும்.
வேறு சில காரணங்காளாலும் பசி மந்தமாகி, பெளத்திரம் வரலாம். ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருத்தல், மலம், சிறுநீர், குடல்வாயு ஆகியவற்றை அடக்குதல், எண்ணெய்ப் பண்டங்களை அதிகமாய் சாப்பிடுதல், காரம், புளி மிகுந்த உணவு, அசைவ உணவில் அதிக விருப்பம், மன சோர்வு, அடிக்கடி ஏற்படும் கோபம், சோகம் போன்ற காரணங்களால் குடலில் இருந்து வெளியேற வேண்டிய மலம் தடையுற்று ஜீரணம் கெட்டு விடுகிறது.
கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய கார உணவுகளையும், கொழுப்புச்சத்து நிறைந்த அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடவேண்டும்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து, போதுமான அளவு நீரை அருந்தி வந்தால் இந்நோயின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களையும், கிழங்குகளையும் உட்கொள்வது, இரவில் செரிக்க கடினமான பொருட்களை சாப்பிடுவது, போன்ற காரணங்களால் மலச்சிக்கல் தோன்றலாம்.
இந்த மலச்சிக்கல் பலநாட்கள் நீடிக்கும் பொழுது, மூலமாக மாறிபின் பெளத்திரமாக மாறிவிடும். மேலும் மலம் மற்றும் அபான வாயுவை அடக்குவதற்காக ஆசனவாயை நாம் இறுக்கமாக வைத்துக்கொள்வதாலும் மலவாய் சுருங்கி, இந்நோய் ஏற்படலாம்.
மூலம், ஆசனவாய்வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும். (ஆனால் அனைத்து மூல நோய்களும் புற்று நோயாவதற்கான வாய்ப்பு இல்லை), அதனால் இந்த நோய் ஏற்பட்டால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
நீங்கள் இந்த மூன்றிலும் பதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவத்தை மேற்க்கொள்வது நல்லது.
கேள்வி: நான் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவன். இவ்வாறு அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
மருத்துவர் பதில்:அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்பவர்களுக்கு மூல நோய் வர வாய்ப்பு உண்டே தவிர கண்டிப்பாக அவர்கள் மூல நோயால் பாதிக்கபடுவார்கள் என்பது சரியல்ல அதிக உடல் சூடு கொண்டவர்களையும் மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல.
மலச்சிக்கல், தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.
தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் மேற்கொள்வதுமே இந்த நோய்களிடம் இருந்து விடுபட வழி.
.
மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
==–==

You must be logged in to post a comment.