கேள்வி: எனக்கு வெளிமூலம் இருக்குமோ, என்று சந்தேகமாக இருக்கிறது. இதை அறிய என்ன வழி?
- மருத்துவர் பதில்: வெளிமூலம் இருக்கும் பட்சத்தில் உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்படவேண்டியிருக்கும். மேலும் ஒரு பந்தின் மீது வலியுடன் உட்கார்ந்துள்ளது போன்ற உணர்வு ஏற்படும். ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் இருக்கும்.
- வெளிமூலத்தின் ஆரம்ப நிலையில் ஆசனவாய் சுற்றி பரவி இருக்கும் சிரைநாளங்களில் ஃ போன்ற மிளகு வடிவத்தில் மூன்று சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி இருக்கும்.
- இரண்டவது நிலையில் மிளகு வடிவில் இருந்த மூன்று வீக்கமும் வெளியே தெரியும்படி சற்று பெரிய வீக்கமாக காணப்படும் போது வலியும் வேதனையும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கும்.
- மலம் கழிக்கும் போது வலி மேலும் கடுமையாகும். மலம் கழிக்கும் நேரத்தில் வலி எரிச்சல் வேதனையால் அவதிப்படுவார்கள். சிலருக்கு இரத்தப்போக்கும் இருக்கலாம். மேலும் மலங்கழிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தாலே பயப்படுவார்கள்.
- வீக்கத்திலிருந்து ஒருவித நிறமற்ற திரவக்கசிவு ஏற்பட்டு ஆசனவாயில் நமைச்சல் ஏற்படும். இந்நிலையில் ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் ஏற்படும்.
- மேற்கண்ட அனைத்து அறிகுறிகளும் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது வெளிமூலம் என நீங்கள் அறியலாம். அவ்வாறு இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறுவது அவசியம்.
கேள்வி: மூல நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? உணவுப்பழக்கம், மாற்று மருத்துவ முறையில் தீர்வு உண்டா?
- மருத்துவர் பதில்: ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வீங்குவதால் மூல நோய் வருகிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
- வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும்.
- அழுத்தம் அதிகமாக கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.
- மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை, தொப்பை உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலம் உண்டாகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும்.
- ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு அதனை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும்.
- முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னரும்சிலருக்கு மீண்டும் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.
- நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
- மாற்று மருத்துவத்தில் இதற்க்கு சிகிச்சை இருக்கிறது.முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் தொன்றி ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும்.
- இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும்.
- எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
- அறுவை சிகிச்சை தற்காலிக பலனலித்தாலும் மீண்டும் மூலம் வரலாம். எனவே மருந்துகள் மூலமாக மூலத்தை சரி செய்வது நல்லது.
- பிட் நோட்டீஸ் பார்த்து தகுதியில்லாத மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து பின் அவதிப்படுவதை விட. ஹோமியோபதி சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது நல்லது.
கேள்வி: எங்கள் வீட்டில் என் தாத்தா, அப்பா, தம்பி எல்லோருக்கும் மூலம் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. மூலநோய் தீர என்ன வழி?
- மருத்துவர் பதில்: மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வீங்குவதால் மூல நோய் வருகிறது.
- இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நாட்பட்ட மலச்சிக்கலால்,கல்லீரலில் தங்களுடைய வேலைகளைச்சரிவர செய்யாவிடில், தாய் தந்தை வழியாகவும், பட்டினி கிடத்தல், பசியின்மை இவை போன்றவற்றால் கீழ் நோக்கி மலத்தை தள்ளும் குடல் தன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்றாlலும் வருகிறது.
- மேலும் ஒரு குடும்பத்தில் பலருக்கு மூலநோய் இருக்கிறதென்றால் உங்கள் அனைவரின் உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது, அதிக காரம், மசாலா, அசைவ உணவு வகைகள், நேரம் தவறி உண்பது போன்ற பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
- மலம் கழித்தபின்பும் மலக்குடலில் இருப்பது போன்ற உணர்வு, ஆசன வாயில் எரிச்சல், காந்தல் வலி, உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாதது, மனச்சோர்வு, அடிக்கடி கோபம் கொள்ளுதல் போன்றவை ஏற்படும்.
- உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, உட்கார்ந்தே செய்யும் வேலை. நாற்காலியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது. குடலில் அல்சர் இருந்தாலும் மூலம் உண்டாகும்.
- முதல் கட்ட மூலநோயில் அவ்வளவாக அறிகுறிகள் தெரியாது. வலி இருக்காது. மலம் கழிக்கும் போது, சில சமயங்களில் சங்கடமாக இருக்கும். சிறிது ரத்தப்போக்கும் இருக்கலாம். இரண்டாவது கட்டத்தில் சதை வீங்கி வெளியே வரும்
- தினசரி உணவு வகைகளில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவிற்கு பின் ஏதாவது ஒரு பழவகையை சேர்த்துக் கொள்ளலாம்.
- தினம் வாழைப்பழம் சாப்பிடலாம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பகலில் மோரும், இரவில் பாலும் சேர்த்துக் கொள்ளலாம். இளநீர், எலுமிச்சைப்பழம், நெய், வெண்ணெய், நெய்யில் வதக்கிய வெங்காயம், கருணைக்கிழங்கு ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் :
- கருணைக்கிழங்கு தவிர அனைத்து கிழங்கு வகைகள், பாசிப்பயிறு தவிர அனைத்து பயிர்வகைகள், முட்டை முதல் அனைத்து அசைவ உணவுகள், காரம், மசாலாப் பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும்
- பகலில் தூக்கம், புகைபிடித்தல், மது வகைகள், வெயிலில் அதிகம் செல்வது, காற்றுப் புகாத கடினமான இருக்கையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல் இவைகளை தவிர்க்க வேண்டும்.
- உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.
- தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த நோய் அதிகம் தாக்கப்படுகிறது. வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து வெளிவர சிறந்த வழி.
- முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாயில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல், அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது.
- இதில் ஏற்படும் கொப்பளங்கள் குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே இதற்கு தீர்வு காண்பது அவசியம்.
கேள்வி: எனக்கு நாட்பட்ட மூலம் இருக்கிறது இப்போது ஆசன வாயின் அருகில் கட்டி ஏற்பட்டு பெளத்திரம் என்ற நோயும் வந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார். இதில் இருந்து விடுபட எதேனும் வழி இருக்கிறதா?
- மருத்துவர் பதில்: மூல நோய்க்கு எவையெல்லாம் காரணமாகிறதோ அவையனைத்தும் பெளத்திரம் நோய்க்கும் காரணமாகின்றன.மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணையும் இடத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘மெல்லிய குழாய்’ போன்று உருவாகிவிடும்.
- மலம் கழிக்கும்போது மலம் அந்த மெல்லிய குழாய்க்குள்ளும் இறங்கிவிடும். பின் அங்கு நோய்த்தொற்று உருவாகி சீழ்கட்டி உருவாகி வெடிக்கும். அந்த நிலையைத்தான் பெளத்திரம் என்கிறோம். இந்த நிலை மீண்டும் மீண்டும் ஏற்படும்.
- வேறு சில காரணங்காளாலும் பசி மந்தமாகி, பெளத்திரம் வரலாம். ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருத்தல், மலம், சிறுநீர், குடல்வாயு ஆகியவற்றை அடக்குதல், எண்ணெய்ப் பண்டங்களை அதிகமாய் சாப்பிடுதல், காரம், புளி மிகுந்த உணவு, அசைவ உணவில் அதிக விருப்பம், மன சோர்வு, அடிக்கடி ஏற்படும் கோபம், சோகம் போன்ற காரணங்களால் குடலில் இருந்து வெளியேற வேண்டிய மலம் தடையுற்று ஜீரணம் கெட்டு விடுகிறது.
- கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய கார உணவுகளையும், கொழுப்புச்சத்து நிறைந்த அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடவேண்டும்.
- ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து, போதுமான அளவு நீரை அருந்தி வந்தால் இந்நோயின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
- எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களையும், கிழங்குகளையும் உட்கொள்வது, இரவில் செரிக்க கடினமான பொருட்களை சாப்பிடுவது, போன்ற காரணங்களால் மலச்சிக்கல் தோன்றலாம்.
- இந்த மலச்சிக்கல் பலநாட்கள் நீடிக்கும் பொழுது, மூலமாக மாறிபின் பெளத்திரமாக மாறிவிடும். மேலும் மலம் மற்றும் அபான வாயுவை அடக்குவதற்காக ஆசனவாயை நாம் இறுக்கமாக வைத்துக்கொள்வதாலும் மலவாய் சுருங்கி, இந்நோய் ஏற்படலாம்.
- மூலம், ஆசனவாய்வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும். (ஆனால் அனைத்து மூல நோய்களும் புற்று நோயாவதற்கான வாய்ப்பு இல்லை), அதனால் இந்த நோய் ஏற்பட்டால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
- நீங்கள் இந்த மூன்றிலும் பதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவத்தை மேற்க்கொள்வது நல்லது.
கேள்வி: நான் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவன். இவ்வாறு அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
- மருத்துவர் பதில்: அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்பவர்களுக்கு மூல நோய் வர வாய்ப்பு உண்டே தவிர கண்டிப்பாக அவர்கள் மூல நோயால் பாதிக்கபடுவார்கள் என்பது சரியல்ல அதிக உடல் சூடு கொண்டவர்களையும் மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல.
- மலச்சிக்கல், தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.
- தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் மேற்கொள்வதுமே இந்த நோய்களிடம் இருந்து விடுபட வழி.
.
மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:– 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
pails, piles, bailes, moolam, pavuthiram, powthiram, pisar, fisar, fisure. fissure, failes, motion problem, mosan prablem


You must be logged in to post a comment.