SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Urticaria / Allergic Hives Homeopathy Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒவ்வாமை தடிப்பு அர்டிகேரியா ஓமியோபதி சிறப்பு சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு,
June 25th, 2015 by Dr.Senthil Kumar

 

skin allergy, ஸ்கின் அலர்ஜி, Urticaria Allergic hives homeopathy specialty treatment clinic in chennai, velachery, tamil nadu

 

Urticaria / Allergic Hives ஒவ்வாமை தடிப்பு

 

ஒவ்வாமை தடிப்பு

  • அரிப்புடன் கூடிய திட்டுதிட்டான சிவந்த அல்லது ஊதா நிற வீக்கமே ‘ ஒவ்வாமை தடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது.
  • உடலின் எந்தப் பாகத்திலும், இந்தத் தடிப்பு தோன்றலாம். சில மணி நேரங்களுக்கு மட்டுமே இந்த வீக்கம் இருக்கும். 48 மணி நேரத்திற்குள் தடிப்புகள் மறைந்துவிடும். அவை தோன்றியதற்கான எந்தத் தடயமும் தோலில் இருக்காது.
  • இது வழக்கமாக எல்லோருக்கும் வரக்கூடிய தோல் பாதிப்பு ஆகும்.
  • பெரும்பாலோருக்குத் தடிப்பு தோன்றி சில நாட்கள் அல்லது வாரங்களில் குணமாகிவிடும்.
  • மிக அரிதாகவே, இந்த தடிப்பு சிலருக்குப் பல வருடங்கள் வரை நீடிக்கிறது.
  • இந்தத் தடிப்பு கண் அல்லது உதட்டுப் பகுதியில் தோன்றும்போது அந்த இடம் அதிக அளவில் வீங்கிக் காணப்படுகிறது. மெல்லிய திசு என்பதால் வீக்கம் அதிகமாகிறது. பார்க்க பயங்கரமாகத் தோற்றமளித்தாலும், இந்தத் தடிப்பு 24 மணி நேரத்திற்குள் மறைந்துவிடுகிறது.

 

ஒவ்வாமை தடிப்பு வர காரணம்?

  • தோலில் உள்ள சிறு இரத்தக் குழாய்களில் ஏற்படும் நீர்க் கசிவினால் தடிப்பு தோன்றுகிறது.
  • தோலில் உள்ள இரத்தக் குழாய்களில் இயற்கையாகப் படிந்திருக்கும் ‘ஹிஸ்டமைன்’ என் வேதிப் பொருள் வெளியாவதால், தோலில் வீக்கம் ஏற்படுட்டு தடிப்பு உண்டாகிறது.
  • தொற்று, உணவு, மருந்துப்பொருள், புறக்காரணிகள் (வெளில், வியர்வை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, வெப்பம், அழுத்தம், குளிர்ச்சிஸ்ரீ போன்றவையே தடிப்பு உருவாகுவதற்கான வழக்கமான காரணங்கள் ஆகும்.
  • அரிதாகவே, பூச்சிக்கடியும் உடலினுள் இருக்கும் உள்நோயும் காரணங்களாக அமைகின்றன.
  • சில சமயம், காரணம் என்னவென்று தெரியாமலேயே தடிப்புகள் உடலில் தோன்றலாம்.
  • சில வகைப் பருப்புகள், முட்டை, புளிப்புச் சுவையுடைய பழங்கள், தக்காளி, மீன், உணவுப்பொருட்கள் கெடாமல் இருக்கச் சேர்க்கும் கலவைகள் போன்றவை உணவுப்பொருளால் ஏற்படும் தடிப்புகளுக்கான காரணிகள் ஆகும்.
  • நோய்த்தொற்றின் காரணமாகவும் தடிப்புகள் ஏற்படுகின்றன. சுவாசக்குழாயில் ஏற்படும் வைரஸ் கிருமித் தொற்றே, குழந்தைகளுக்குத் தடிப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது. பாக்டீரியா, காளான் தொற்று போன்றவற்றாமல் தடிப்பு வரலாம்.
  • சில வகை மருந்துகள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாததால் ஒவ்வாமை ஏற்பட்டு தடிப்புகள் வருகின்றன. தடிப்புக்குக் காரணமாக அமையும் பொதுவான மருந்துகளாக நோய்எதிர்ப்பு மருந்துகள் (பென்சிலின், சல்பான மைட்ஸ்), வலிநிவாரணிகள் ( ஆஸ்பிரின், கோடைன்), மயக்க மருந்துகள், சிறுநீரை பெருக்கும் மருந்துகள், ஆகியவற்றைச் சொல்லலாம். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத எந்த மருந்தும் தடிப்பை ஏற்படுத்தலாம். நாமாக மருந்துகடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் வைட்டமின் மாத்திரைகள், வயிற்றுவலி நீக்கி மாத்திரைகள், கண் மற்றும் காதுக்கான சொட்டுமருந்துகள், பேதி மாத்திரைகள் போன்றவற்றாலும் தடிப்புகள் வரலாம். தோல் மருத்துவரிடம் தடிப்புக்கான சிகிச்சைக்குச் சென்றால், நீங்கள் பயன்படுத்தும் அனைத்து மருந்துகளைப் பற்றியும், அவரிடம் மறைக்காமல் சொல்லுங்கள்.

 

ஒவ்வாமை தடிப்புக்கான சிகிச்சை

  • தடிப்பு வருவதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அதை நிக்குவதே சிகிச்சைக்கான சரியான தீர்வாகும்.
  • தடிப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு முன்னால், ‘ஆன்டி-ஹிஸ்டமைன்’ எனப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து நோயாளிக்குத் தரப்படுகிறது. இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
  • தொடர்ச்சியாக ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும்போது தடிப்பு வருவது தவிர்க்கப்படுகிறது.
  • மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளான மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை தவிர்க்க, இவற்றை ஏற்படுத்தாத ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளும் கிடைக்கின்றன.
  • ஒரே ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து, எல்லா நோயாளிகளுக்கும் பொருந்திவரும் அல்லது குணமளிக்கும் என்ற கூற முடியாததால், உங்களுக்கு ஏற்ற ஒன்றுக்கு மேற்பட்ட மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
  • கார்டிசோன் ஸ்டீராய்ட் மருந்துகள் எளிதாக தற்காலிக குணமளிக்கும் என்றாலும், அதிக பக்கவிளைவுகளை அவை உருவாக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு அவற்றை பயன்படுத்தக் கூடாது.
  • தோல் பரிசோதனைகள் செய்துகொள்வது பெரும்பாலும் பலனளிப்பதில்லை.

 

 

 

ஒவ்வாமை தடிப்புக்கான ஓமியோபதி சிகிச்சை

நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.

 

Whom to contact for Allergic Hives / Urticaria Treatment

Vivekanantha Homeopathy Clinic Doctor treats many cases of Allergic Hives / Urticaria  In his medical professional experience with successful results. Many patients over come from their issues after taking treatment from our center.  You can consult our Doctor  in Chennai at Vivekanantha Homeopathy & Psychological Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,

 

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – ஸ்கின் அலர்ஜி, ஹைவ்ஸ், தோல் நோய்கள், அர்டிகேரியா urticaria, Allergic Hives, Itching Skin, Skin Hives.  – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

 

 

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India