SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Vinthu Seekiram varutha? விந்து சீக்கிரம் வந்துவிடும் Quick semen discharge
March 16th, 2018 by Dr.Senthil Kumar

 

 

கேள்வி: மதிப்பிற்குறிய மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், எனக்கு திருமனமாகி 10 மாதங்கள் ஆகிறது. எனது கணவருக்கு விந்து சீக்கிரம் வந்துவிடும் Quick semen discharge பிரச்சனை இருக்கிறது, எனது உறுப்பில் அவரது ஆண்குறியை வைக்கும் முன்பே அவருக்கு சீக்கிரம் விந்து தண்ணி வந்து விடுகிறது, சில நேரங்களில் அவரது ஆணுறுப்பை என் கையால் பிடித்தாலும் உடனே விந்து வந்துவிடுகிறது. அவருக்கு திருமனத்திற்க்கு முன்பு கைப்பழக்கம் Self sex habit இருந்திருக்கிறது என என்னிடம் சொல்லியுள்ளார். இதனால் நான் கர்பமாவதும் தள்ளிபோகிறது, மேலும் உடல் உறவில் திருப்தியில்லாமல் அவர் மீது அதிக கோவமும் வெறுப்பும் வருகிறது. விந்து முந்தி வரும் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை உண்டா அல்லது டைவர்ஸ் வாங்கிவிடலாமா.

 

மருத்துவர் பதில்: அன்பிற்குறிய **** அவர்களுக்கு. இது சரிசெய்யக்கூடிய பிரச்சனையே. இதற்கெல்லாம் டைவர்ஸ் வாங்கக்கூடாது

 

உடலுறவில் ஏற்படுகின்ற திருப்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உடலுறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய பேரின் இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம் ஆகிவிடுகின்றது.

 

தன் துணையை திருப்திப் படுத்த முடியாமல் ஆண்களை சங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையே Premature Ejaculation எனப்படுகிறது. தமிழில் சொல்வதானால் பெண் உண்மையான திருப்தி நிலையை உச்சகட்டம் ஆர்கசம் Orgasm  அடையும் முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து, ஆண்குறி விந்தை கக்கி விடுதல் Quick emission of semen.

 

இவ்வாறு பெண் உச்ச நிலை அடையும் முன்பே ஆண் உச்ச நிலை அடைவது, பெண்ணுக்கு போதிய திருப்தியை அளிக்காமல் உடலுறவில் வெறுப்பை ஏற்படுத்துவதுடன், ஆணின் மனதிலும் தன்னால் துணையை சந்தோசப்படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மன நிலையை உருவாக்கி விடுகிறது. இதுவே அவர்களின் இல்லறத்தின் முறிவுக்கு முதல் படிநிலையாக அமைந்து விடலாம்.

 

உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையா?

இல்லை

இந்த விந்து முந்தி வெளிப்படுவது ஆண்களுக்கு மிகவும் பொதுவாக காணப்படும் பிரச்சினையாகும். நூறு ஆண்களை எடுத்துக் கொண்டால் முப்பது பேருக்கு இந்தப் பிரச்சினை உண்டு.

 

என்ன காரணத்தால் இது ஏற்படுகிறது?

இது உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டதாகும். ஆண்களுக்கு ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இதற்கு முக்கிய காரணம். எஜாகுலேடரி டக்ட் Ejaculatory Duct எனப்படும் விந்து வெளியேற்றுவதை கட்டுப்படுத்தும் குழாய் தளர்வதனாலும் Weakness of Ejaculatory Duct இந்த பிரச்சனை ஏற்படலாம்.

 

உடலுறவில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் நிறைய ஆண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். இருந்தாலும்  நாள் செல்ல செல்ல அநேகமான ஆண்கள் இந்தப் பிரச்சினையினால் தாழ்வு மனநிலை Stress and low libido கொண்டவர்களாகவே மாறி விடுகிறார்கள்.

 

சுய இன்பத்தில் masturbation ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?

நிறைய ஆண்கள் தாங்கள் சிறுவயதில சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி அதனால் தங்களால் தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகிறார்கள். எப்போதாவது செய்யும் சுய இன்பத்தினால் இந்த பிரச்சனை ஏற்படாது. ஆனால் அடிக்கடி சுய இன்பம் Over masturbation or Masturbation addiction செய்வதனால் மனதில் விரைப்புத்தன்மை வந்தவுடன் விந்தை வெளியேற்றிவிடவேண்டும் என்ற எண்ணம் நிரந்தரமாக ஏற்பட வாய்ப்பு உண்டு அதனால் அடிக்கடி கைப்பழக்கம் செய்வதை தவிர்க்கலாம்.

 

இதற்கு என்ன தீர்வு?

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை. முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

எடுத்த எடுப்பிலேயே புணர்ச்சியை நோக்கி செல்லாமல் அதற்கு முந்திய Foreplay எனப்படும் முன்விளையாட்டு தொடுகை செய்கைகள் மூலம் உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ளவேண்டு. அப்போது ஆணுறுப்பை தொடுவதை இறுதிவரை தவிர்க்க வேண்டும் don’t touch penis during foreplay to avoid quick semen discharge.

 

அடுத்ததாக ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது  புணர்ச்சிய நிறுத்தி சற்று மனதை நிதானமாக்கி relax மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

 

இதன் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் மருத்துவர் / உளவியல் ஆலோசகரை சந்தித்து சரியான மருத்துவ சிகிச்சை மற்றும்  sex therapy ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும். Proper treatment and sex therapy helps for quick semen ejaculation.

 

 

மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.

விவேகானந்தா கிளினிக்  & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment please Call us or Mail Us

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரமேஷ் – 28 – 99******00 – விந்து முந்துதல்,  விந்தில் இரத்தம் வருதல், Blood in semen – 20-12-2017 – சனிக்கிழமை – சென்னை,

 

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

Feel Free to Contact us 
* indicates required field

 

Eṉakku tirumaṉamāki 10 mātaṅkaḷ ākiṟatu. Eṉatu kaṇavarukku vintu cīkkiram vantuviṭum Quick semen discharge piraccaṉai irukkiṟatu, eṉatu uṟuppil avaratu āṇkuṟiyai vaikkum muṉpē avarukku cīkkiram vintu taṇṇi vantu viṭukiṟatu, cila nēraṅkaḷil avaratu āṇuṟuppai eṉ kaiyāl piṭittālum uṭaṉē vintu vantuviṭukiṟatu. Avarukku tirumaṉattiṟkku muṉpu kaippaḻakkam Self sex habit iruntirukkiṟatu eṉa eṉṉiṭam colliyuḷḷār. Itaṉāl nāṉ karpamāvatum taḷḷipōkiṟatu, mēlum uṭal uṟavil tiruptiyillāmal avar mītu atika kōvamum veṟuppum varukiṟatu. Vintu munti varum piraccaṉai etaṉāl ēṟpaṭukiṟatu. Itaṟku cikiccai uṇṭā allatu ṭaivars vāṅkiviṭalāmā.


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India