விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல் – Low Sperm Count
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல் ஆண்களின் விந்தில் உயிரனுக்களின் அளவு (Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து விந்து நீராக (Seminal fluid) வெளியேறும். விந்தணுக்களின் உற்பத்தியிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்பிகள் சாதாரணமான முறையிலே செயல்படுவதால் உடலுறவின் போது அவர்களுக்கு விந்து நீர் வெளியேறலாம். அனைவரின் விந்துகளிலும் விந்தனுக்களின் எண்னிக்கை தேவையான அளவு இருக்கும் என்றில்லை.