SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
சூலக நீர்க்கட்டி நோய் Poly Cystic Ovarian Disease / Syndrome, PCOD / PCOS
January 25th, 2012 by Dr.Senthil Kumar

PCOD PCOS Homeopathy Treatment (2)

 

சினைப்பை (சூலக) நீர்க்கட்டி சிறப்பு சிகிச்சை

 

Poly (பாலி) என்பது பல

Cyst (சிஸ்ட்டிக்) எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டி.

OVARY (ஓவேரியன்) எனப்படுவது பெண்களின் சூலகம்.

Disease (டிஸீஸ்)என்பது நோய்.

 

ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இது கரு முட்டைகளை (அண்ட அனுக்கள்) உருவாக்கி கருவாக்கம் நடைபெற்று குழந்தை உருவாகிறது.

 

ஒரு பெண்ணின் சூலகத்திலே நீர் கட்டிகள் பல உருவாவதே Poly Cystic Ovarian Disease (PCOD) எனப்படுகிறது.

 

Poly Cystic Ovarian Disease ஆனது பல அறிகுறிகளை (Syndrome) உருவாக்குகிறது. அந்த அறிகுறிகள்  Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்று அழைக்கப்படுகிறது.

 

அறிகுறிகள்

  • குழந்தையின்மை – சூலகத்தில் சிறு சிறு நீர் கட்டிகள் பரவலாக காணப்படுவதால் சினை முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதனால் பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

 

  • ஹார்மோன் குறைபாடு – சூலக நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் தன்மை  ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

 

  • ஒழுங்கற்ற மாதவிடாய் – சூலக நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக வராது. 2 – 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வரும். சிலருக்கு இரத்தப்போக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு மிகுதியாக இருக்கும்.

 

  • முகத்தில் முடி வளர்தல் – ஆண்மைத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதால் ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் (மேலுதடு, கீழ்தாடை) முடி வளர ஆரம்பிக்கிறது. உடலிலும் (மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, கைகளில்) முடி வளரலாம்.

 

 

 

  • நிற மாற்றம் – உடலில் சில இடங்களில் (கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதி) கருமை நிறம் அதிகரித்து காணும்.

 

இந்த அறிகுறிகள்  பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் என்றில்லை.  சூலக நீர்க்கட்டிகள் இருக்கும் போதே குழந்தைகள் பல பெற்ற பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பின்பு கூட சூலக நீர்க்கட்டிகள் வரலாம்

 

காரணம்

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

 

ü  நோய்க்கான காரணத்தை இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

 

ü  பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.

 

ü  வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

 

ü  கருத்தரிக்க இயலாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

 

ஆய்வக பரிசோதனைகள்

ஸ்கேன் செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.

ஹார்மோன்கள் சோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

 

ஆலோசனைகள்

 

  • உணவு கட்டுப்பாட்டு – அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும், தவிர்த்தல் நல்லது. காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

 

  • புகை – புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும்.

 

மருத்துவம்

மாதவிடாய் சீராக வெளிப்படுதலைத் தூண்ட நவீன மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

 

ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை

நோயின் அறிகுறிகளுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகள் உட்கொள்வதின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் ஹோமியோபதி சிறப்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

 

எப்போது மருத்துவரை சந்திக்கவேண்டும்

ü  14 வயதாகியும் மாதவிலக்கு ஆரம்பிக்காவிட்டால்.

 

ü  ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய் ஏற்படுகிறது என்றால்.

 

ü  மார்பு , முகம் போன்ற இடங்களிலே முடி வளர்ந்தால்.

 

ü  உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்

 

ü  அளவுக்கு அதிகமாக முகப் பரு ஏற்பட்டால்.

 

ü  கழுத்து மற்றும் அக்குள் தொடை பகுதிகளிலே கருமை நிறமாற்றம் காணப்பட்டால்.

 

உடனே மருத்துவரை சந்திக்கவும்

 

சினைப்பை (சூலக) நீர்க்கட்டி நோயால் பாதித்த பலருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்புகொள்ளவும் சிகிச்சைக்கும் இங்கே கிளிக் செய்யவும்.

 

சினைப்பை (சூலக) நீர்க்கட்டி பிரச்சனைக்காக சிகிச்சை பெற இங்கே கிளிக் செய்யவும்

http://treatmentt.blogspot.com/2009/12/pcodpcos-treatment.html

 

 

நீர்க்கட்டி ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   சினைப்பை நீர்க்கட்டி நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

புதுச்சேரி:- 9865212055

பண்ருட்டி:- 9443054168

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India